Tuesday 30th of April 2024 08:20:13 AM GMT

LANGUAGE - TAMIL
-
அவுஸ்திரேலிய காட்டுத் தீயால்  60,000  கோலா  கரடிகள்  கருகி இறந்திருக்கலாம் எனத் தகவல்!

அவுஸ்திரேலிய காட்டுத் தீயால் 60,000 கோலா கரடிகள் கருகி இறந்திருக்கலாம் எனத் தகவல்!


அவுஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 60,000 கோலா கரடிகள் உயிரிழந்து அல்லது கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கலாம் என உள்ளதாக இயற்கை வளங்கள் தொடர்பான சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள 10 மில்லியன் ஹெக்டேர் காட்டுப் பகுதிகளில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் காட்டுத் தீ பரவியது. இதில் 2,000 வீடுகள் எரிந்தன. 28 பேர் இறந்தனர். இந்த காட்டுத் தீயில் அரிய வகை விலங்குகள் உட்பட இலட்சக்கணக்கான வனவிலங்குகள் பலியாகின.

தொடர்ந்து 3 மாதங்களுக்கு மேல் பற்றி எரிந்த காட்டுத் தீயால் 3 பில்லியனுக்கும் அதிகமான விலங்குகள் பலியாகிதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இவற்றில் கோலா கரடிகள் , கங்காருகள் அதிக அளவில் பலியாகி உள்ளன.

இதில் கோலா கரடிகள் மட்டும் 60,000 எண்ணிக்கையில் இறந்துள்ளன எனவும் இயற்கை வளங்கள் தொடர்பான சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் 3 இலட்சத்துக்கும் அதிகமான கோலா கரடிகள் உள்ளன. இந்த நிலையில் அங்கு ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக இந்த எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது என்று அந்நாட்டு விலங்குகள் நல ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.


Category: செய்திகள், புதிது
Tags: ஆஸ்திரேலியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE